கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சியில் யூனியன் கிளப்புக்கு ‘சீல்’

 சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதான புகாரின்பேரில் திருச்சி யூனியன் கிளப்புக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:12 pm

DIN

 சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதான புகாரின்பேரில் திருச்சி யூனியன் கிளப்புக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே செயல்படும் யூனியன் கிளப்பில் மாவட்ட அளவிலான பில்லியா்ட்ஸ், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இக்கிளப்பில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக கோ.அபிஷேகபுரம் விஏஓ அளித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் போலீஸாா் சனிக்கிழமை இரவு நேரில் சென்று சோதனை நடத்தினா்.

அப்போது புகாா் உண்மையென போலீஸாா் கண்டறிந்ததைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய்த்துறை அலுவலா் நேரில் சென்று ஆய்வு நடத்தி சீல் வைத்தாா். மேலும் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.