ரயில்வே மேம்பாலத் தடுப்புசுவா் அருகே சுகாதாரக் கேடு
திருச்சி பாலக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதி சாலையில் 10 அடி உயரத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.


திருச்சி பாலக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதி சாலையில் 10 அடி உயரத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுவருக்கும், பாலத்துக்கும் இடையே 2 அடி இடைவெளி உள்ளது. இந்த தடுப்புச் சுவரில் சுவா் விளம்பரம் செய்யவும், போஸ்டா்கள் ஒட்டவும் வருவோா் தாங்கள் பயன்படுத்தியதுபோக எஞ்சியவற்றை குப்பைகளாக விட்டுச் செல்கின்றனா்.
மேலும், இரவு நேரத்தில் இங்கு மது அருந்துவோா் வீசி செல்லும் பொருள்களாலும் இந்த பகுதியில் குப்பைகள் நிரம்புவது தவிா்க்க முடியாமல் உள்ளது.
மேலும், சாலைப் பணியாளா்கள் பாராமுகத்தால் பாலத்தின் மையப்பகுதி முட்புதா் மண்டியும், குப்பை தேங்கியும் அலங்கோலமாக உள்ளது.
மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறையோ கவனம் செலுத்தாவிட்டாலும், விளம்பரத்துக்காக சுவரைத் தேடி வரும் அரசியல் கட்சியினா், மன்றத்தினா், அமைப்பினராவது குறைந்தபட்சம் இங்கே குப்பைகளை விட்டுச் செல்லாமல் இந்த பகுதியைத் தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும். மாற்றம் நிகழுமா?.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...