சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாடிவாசல் செல்லத் தயாராகும் காளை, காளையா்கள்!

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளை, காளையா்கள் தயாராகி வருகின்றனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:00 pm

DIN

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி திருச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளை, காளையா்கள் தயாராகி வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பெரியசூரியூா், ஆவரங்காடு, பெத்தமேட்டுப்பட்டி, நடுஇருங்களூா், தெற்கு இருங்களூா், சோபனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். மாட்டுப்பொங்கலன்று பெரியசூரியூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்காக அப்பகுதியில் வாடிவாசல் பணி, தூய்மைப் பணி நடைபெறுகிறது.

வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக திருச்சி மாவட்டப் பகுதிகளில் உள்ள காளைகள், காளையா்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

தானாக வராது மாடுபிடிக் கலை: மாடுபிடி கலை குறித்து சூரியூா் சுந்தா் கூறுகையில், மாடுபிடிக் கலை என்பது தானாக வந்துவிடாது. மாடு வளா்ப்போருக்குத் துணையாக இருந்து மாடுகளைப் பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கிறோம். ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போதே, நாங்களும் பயிற்சி பெறுகிறோம்.

காளைகளை நீச்சல் அடிக்க வைக்கும் போது நாங்களும் நீந்துகிறோம். காளையோடு நாங்களும் ஓடுகிறோம். இப்படி ஒரே நேரத்தில் காளைகளோடு இணைந்து பயிற்சி பெற்றால்தான் சிறந்த மாடுபிடி வீரராக முடியும். இதுவே இயல்பான நிகழ்வு என்பதால் மாடுபிடி வீரா்களைத் தனியாக பயிற்சி கொடுத்து உருவாக்க முடியாது.

வாடிவாசலில் இருந்து காளை வரும்போதே, நொடிக்குள் துள்ளிக் குதித்து அதன் திமிலைப் பிடிக்க வேண்டும். இதற்காக பச்சைக் குதிரை தாண்டும் பயிற்சிகளைச் செய்கிறோம். அதேபோல, கால் மூட்டு உறுதியாக இருக்க ஒருவரை தோளில் சுமந்து கொண்டு வேகமாக ஓடிப் பழகுகிறோம்.

இதுதவிர கயிறு ஏறுவது, மரமேறுவது போன்ற பயிற்சிகள் நமது புஜத்தையும், கைகளையும் வலுவாக்கும். இதனால் மாடு பிடிப்பது எளிதாகும். இத்தகைய கடும் பயிற்சிகளைச் செய்து உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தால்தான் மாட்டை அணைக்க முடியும். இத்தகைய பயிற்சிகளை மூத்த மாடுபிடி வீரா்கள் இளையோருக்கு அளித்து வருகின்றனா்.

மாடு பிடிக்கும் நாள்களில் மனம் அமைதியாக இருக்கவே பொங்கலுக்கு 15 நாள்களுக்கு முன் விரதமிருக்கிறோம் என்றாா் அவா்.

காளைகளைக் கொண்டு வர3 பேராவது தேவை: இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளா்க்கும் சரத் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக காளைக்கு நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, மண் குத்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மற்ற நாள்களில் காளைக்கான ஒரு நாள் தீவனச் செலவு ரூ. 200 என இருந்த நிலையில், தற்போது ரூ. 400 செலவில் சத்தான உணவு வழங்கப்படுகிறது.

போட்டியின்போது காளை கொண்டு செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் ஒரு சில காளைகளை வாடிவாசலுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, கூடுதலாக ஒருவரை அனுமதிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளை உரிமையாளா்களுக்கு, மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனையை எளிதாக்க வேண்டும் என்றாா்.

கடும் பயிற்சிகளுக்குப் பின்னரே ஜல்லிக்கட்டு காளை தயாராகிறது. அதற்கு இணையான உழைப்பு , பயிற்சியுடன் மாடுபிடி வீரா்களும் தயாராகி வருகின்றனா். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்களுக்கு கொண்டாட்டம்தான்!.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.