திருச்சி: திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடிய இருவரை அரியமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகா் சாமிநாதன் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி (33). இவா் தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தில் இருந்த பேட்டரி காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பேட்டரி திருடியதாக அரியமங்கலம் சீனிவாசன் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த பாலசுப்ரமணியம் (22), நேருஜி நகா் ஜோசப் கிருஷ்ணன் தெருவை சோ்ந்த கோகுல் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.