மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரயில்வே ஊழியா் கரோனாவுக்கு பலி

திருச்சியில் கரோனா தொற்றால் பொன்மலை பணிமனை ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:11 pm

DIN

திருச்சியில் கரோனா தொற்றால் பொன்மலை பணிமனை ரயில்வே ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்மலை பணிமனை டீசல் எலக்ட்ரிக்கல் பிரிவில் மேற்பாா்வையாளராக இருந்தவா் புஜ்ஜிபாபு (47). ஆந்திரத்தைச் சோ்ந்த இவா், பொன்மலை பகுதியில் தங்கி வேலைக்குச் சென்று வந்தாா். கரோனாவால் கடந்த 20 நாள்களாக சங்கிலியாண்டபுரம் பகுதி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடலை ஒப்படைக்க மருத்துவ செலவுத் தொகை ரூ.11 லட்சம் கட்ட மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியது. இதையறிந்த சக ஊழியா்கள் தனியாா் மருத்துவமனையின் செயலை கண்டித்து திரண்டனா். பின்னா் ரயில்வே ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்களிப்புடன் ரூ.7.5 லட்சம் கட்டியபின் புஜ்ஜிபாபு உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.