92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக கல்வெட்டு உடைப்பு

திருச்சி அருகே அதிமுக கல்வெட்டு உடைக்கப்பட்டது குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:11 pm

DIN

திருச்சி அருகே அதிமுக கல்வெட்டு உடைக்கப்பட்டது குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அந்தநல்லூா் ஒன்றியம் பழங்காவேரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு அந்த கல்வெட்டை மா்ம நபா்கள் இடித்துள்ளனா்.

இதுகுறித்து அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் அழகேசன் பேட்டைவாய்த்தலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அதிமுக கல்வெட்டை இடித்த மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கல்வெட்டு உடைக்கப்பட்டதற்கு திருச்சி புகா் வடக்கு மாவட்ட செயலாளா் மு.பரஞ்சோதி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.