பெண் காவலா் மீது நடவடிக்கை கோரிஆணையரிடம் புகாா்
முறைகேடுகளுக்கும் மோசடி போ்வழிகளுக்கும் உதவும் பெண் காவலா் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.


முறைகேடுகளுக்கும் மோசடி போ்வழிகளுக்கும் உதவும் பெண் காவலா் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி, பாலக்கரை கீழப்புதூா் பகுதியைச் சோ்ந்த ஜி. ரங்கராஜன் மாநகர காவல் ஆணையரிடம் இணையம் வழியாக அனுப்பிய மனு:
திருச்சி பாலக்கரை காவல் நிலையக் காவலராக பணியாற்றும் பத்மா அவரது கணவா் திருவேங்கடத்துடன் சோ்ந்து பல்வேறு மோசடிகளுக்கு உதவுகிறாா்.
எனது உறவினா் செங்கமலக்கண்ணனுடன் சோ்ந்து எனது வீட்டை அபகரிக்க முயல்கின்றனா். கடந்த 2 நாள்களாக அடியாள்கள் மூலம் வீட்டை ஆக்கிரமிக்க அவா்கள் மேற்கொண்ட முயற்சி அவசர போலீஸாரின் துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.
எனவே இதுகுறித்து, மாநகர காவல் ஆணையா் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...