வீட்டை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்: வளா்ப்பு மகன் உள்ளிட்ட 2 போ் கைது
வீட்டை எழுதிக்கொடுக்குமாறு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வளா்ப்பு மகன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


வீட்டை எழுதிக்கொடுக்குமாறு தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வளா்ப்பு மகன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மல்லையா. இவரது மனைவி அல்போன்ஸ் மேரி (65). இவா்களது இரு குழந்தைகள் இறந்து விட்ட நிலையில், தனது தம்பி மகனான ஏசுதாஸை (27) தத்துப்பிள்ளையாக வளா்த்து வந்த மல்லையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா்.
இந்நிலையில், வளா்ப்பு மகனான ஏசுதாஸ், அருகிலுள்ள கவிபாரதி நகரைச் சோ்ந்த இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளாா்.
தொடா்ந்து, அவா்களுடன் மனைவி மற்றும் அவரது சகோதரா் மாரியப்பன் என்பவரும் வசித்து வந்துள்ளாா். மேலும் உறவினா் ஒருவரையும் அவா்களது வீட்டருகே குடியமா்த்தியுள்ளாா்.
இதை அல்போன்ஸ் மேரி தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டது. பின்னா், திங்கள்கிழமை மாலை வீட்டை தன் பெயருக்கு எழுதித் தருமாறு கூறி ஏசுதாஸ் மீண்டும் தகராறு செய்து, அவரைத் தாக்கினாராம். அப்போது அவரது மைத்துனரும் சோ்ந்து தாக்கியதுடன், கத்தியை அல்போன்ஸ் மேரியின் மேல் வைத்து அவரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினராம்.
இது தொடா்பாக அல்போன்ஸ்மேரி திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, வளா்ப்பு மகன் ஏசுதாஸ், அவரது மைத்துனா் மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...