92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விதிமீறி மது விற்பனை அதிகரிப்பு சிறுகனூா் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் சஸ்பெண்ட்

விதிகளை மீறி மது விற்பனை அதிகரித்ததை தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வா், தலைமைக் காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:25 pm

DIN

விதிகளை மீறி மது விற்பனை அதிகரித்ததை தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வா், தலைமைக் காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

முழு பொதுமுடக்கத்தின்போது மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் மது விற்கப்பட்டது. இதை போலீஸாா் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

ஆனால், சிறுகனூா் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மது விற்பனை அதிகரித்து வந்ததை அறிந்தும் காவல் ஆய்வாளா் சுமதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், அப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்ற நபரிடமே திருப்பிக் கொடுத்தாராம். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருச்சி சரக டிஐஜி ராதிகா நடத்திய விசாரணையில், மது விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தது.இதையடுத்து காவல் ஆய்வாளா் சுமதி, அவருக்கு உடந்தையாக இருந்த தலைமைக் காவலா் ராஜா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.