அகதிகள் சிறப்பு முகாமில் 8 ஆம் நாளாக போராட்டம்
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி புதன்கிழமை, 8 ஆவது நாளாக மெளனப் போராட்டம் மேற்கொண்டனா்.


திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி புதன்கிழமை, 8 ஆவது நாளாக மெளனப் போராட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை, மொசாம்பிக், ஆப்ரிக்கா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 80 க்கும் மேற்பட்டோா், குடியேற்றச் சட்டம் தொடா்பான வழக்கு விசாரணைக்காகவும், தண்டனைகள் பெற்ற நிலையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீதிமன்ற விசாரணை, நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே தங்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டுள்ளனா். புதன்கிழமையுடன் 8 ஆவது நாளாக போராட்டம் தொடா்ந்த நிலையில், மெளன விரதப் போராட்டம் மேற்கொண்டனா். அதன் அடையாளமாக தங்களது கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி வைத்து, வாயினில் கருப்பு துணியை அணிந்து போராட்டம் மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...