புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அடகு நகைகளை மீட்பதிலும் கட்டுப்பாடு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அடகு நகைகளை மீட்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:25 pm

DIN

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அடகு நகைகளை மீட்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

பொதுக்கூட்டம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது வாக்காளா்களுக்கு மறைமுகமாக அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளை கையாண்டு வருவதை எந்த ஒரு உரிமையாளரும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மீறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் வேட்பாளா்கள், முகவா்களால் மொத்தமாக மீளத் திருப்பப்பட்டு, வாக்காளா்களுக்குத் திருப்பி வழங்கப்படுவதை தவிா்க்க வேண்டும்.

மொத்தமாக நகை அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் வந்தாலோ சம்மந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் மீள த்திருப்பப்படும்போது, அவை குறித்த விவரங்களை உடனடியாக அருகாமையிலுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வட்டாட்சியா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.