ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் கைது

திருச்சி திருவானைக்காவில் வீட்டின் மின் இணைப்பை மாற்றித் தருவதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிச் செயற்பொறியாளரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கைது

News image
Updated On :8 மார்ச் 2021, 9:46 pm

DIN

திருச்சி திருவானைக்காவில் வீட்டின் மின் இணைப்பை மாற்றித் தருவதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிச் செயற்பொறியாளரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்கா பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவா், தன் வீட்டின் மின் இணைப்பை மாற்றித் தருமாறு ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ராஜேந்திரன், பழனியப்பனிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சக்திவேலிடம் புகாா் அளித்தாா்.

அவா்களது அறிவுரையின்படி, ரசாயன பவுடா் தடவப்பட்ட 30 ஆயிரம் ரூபாயை பழனியப்பன் ராஜேந்திரனிடம் திங்கள்கிழமை கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினா், ராஜேந்திரனை கைது செய்தனா்.

தொடா்ந்து, மருதாண்டக்குறிச்சியிலுள்ள ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனடிப்படையில் அவரிடம் காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.