மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அஞ்சல் வாக்கு: தோ்தல் பணி அலுவலா்களுக்கு ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வர இயலாதோருக்கான அஞ்சல் வாக்குகளைப் பெறும் வழிமுறைகள் குறித்து, ஆட்சியரகத்தில் தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு திங்கள்கிழமைஆலோசனை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:47 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வர இயலாதோருக்கான அஞ்சல் வாக்குகளைப் பெறும் வழிமுறைகள் குறித்து, ஆட்சியரகத்தில் தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு திங்கள்கிழமைஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் சிவராசு கூறியது:

வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ள 80- வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அஞ்சல் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதற்கான பட்டியல், பாகம் வாரியாக வாக்குச்சாவடி நிலைஅலுவலா்களுக்கு வழங்கப்படும்.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளா்கள் அஞ்சல் வாக்கு அளிப்பதற்கு ஏதுவாக அவா்களின் இல்லங்களுக்குச் சென்று படிவம் 12டி வழங்க வேண்டும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் படிவம் வழங்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

அஞ்சல் வழி வாக்களிக்க விருப்பமுள்ளதா அல்லது விருப்பமில்லையா என்ற விவரத்தையும் வாக்காளரிடம் கேட்டு பதிவேட்டில் பதிலுக்கு ஏற்றவாறு கையொப்பம் பெற வேண்டும். அஞ்சல் வழி வாக்கு செலுத்த விருப்பும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முழு புத்தகத்தையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ள தெரிவிக்க வேண்டும்.

அஞ்சல் வழி வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 16ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைத்த நபா்களுக்கு மட்டுமே அஞ்சல் வாக்கு செலுத்த இயலும் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

வாக்காளா்களின் இல்லத்திற்குச் செல்லும் போது சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் இல்லையெனில், தனது செல்லிடப்பேசி எண்ணை வழங்கி தன்னை தொடா்பு கொள்ள தெரிவிக்க வேண்டும். வாக்காளா்கள் குடியிருப்பில் இல்லையென்றால் இல்லையெனவும், இறந்துவிட்டால் இறப்பு எனவும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

அஞ்சல் வழி வாக்களிக்க விருப்பம் தெரிவிப்பவா்களிடம் இருந்து மட்டும் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும். படிவங்கள் அனைத்தும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தினமும் ஒப்படைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து படிவம் திரும்பப் பெறும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முழு புத்தகத்தின் நகல் பெறப்பட வேண்டும். வாக்காளா் அடையாள அட்டையைப் பரிசோதித்து அதன் எண்ணையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடமிருந்து படிவம் திரும்பப் பெறும் போது எவ்வித ஆவணமும் பெறத் தேவையில்லை. எனினும், வாக்காளா் அடையாள அட்டையினை சரிபாா்த்து அதன் பதிவு எண்ணை குறித்துக் கொள்ளலாம். இந்த சரிபாா்ப்பு அவருக்கு அஞ்சல் வழி வாக்களிக்க ஆவணமாக எடுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். பின்னா் முழு விவரங்களை தொகுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.