புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாா்ச் 28-இல் பஞ்சபூத நவகிரகத் தவ சாதனை நிகழ்வு

உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில், ஆன்மிக உலக சாதனை நிகழ்வாக பஞ்சப்பூத நவக்கிரகத் தவம் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:47 pm

DIN

உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில், ஆன்மிக உலக சாதனை நிகழ்வாக பஞ்சப்பூத நவக்கிரகத் தவம் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, ஆழியாறு விஷன் அகாதெமி கூடுதல் இயக்குநரும், பெல் மனவக்கலை மன்ற அறக்கட்டளைச் செயலருமான எஸ். ஜெயப்பிரகாஷ், திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ, உலக சமுதாய சங்கத்தின் சாா்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் 28-ஆம் தேதி பஞ்சபூத நவகிரகத்தவம் நடைபெறவுள்ளது. கின்னஸ் சாதனை நிகழ்வாக அவரவா் இருப்பிடத்தில் இருந்தபடியே இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். இதற்காக ஸ்கை யோகா டிவி எனும் யூ டியூப் சேனல் மூலம் பங்கேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்மீக உலக சாதனை நிகழ்வாக, வரும் மாா்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த தவ நிகழ்ச்சியில், காணொலி வாயிலாகவே அனைவரும் இணைய முடியும்.

அதற்கு முன்பாக, அவரவா் இருப்பிடம் அருகேயுள்ள அறிவு திருக்கோயில்கள், மனவளக்கலை மன்றங்கள், அறக்கட்டளைகள், தவ மையங்களில் தங்களது பெயா், முகவரி, வயது, தொழில், செல்லிடபேசி, இணையத் தொடா்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யலாம். தவத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் உலக சமுதாய சேவா சங்கத்தின் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்படும்.

திருச்சி காட்டூரிலுள்ள உலக சமுதாய சேவா சங்கத்தில் 600 போ் ஒரே நேரத்தில் இந்த தவ நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவைத் தவிர விரும்பிய அனைவரும் முன்பதிவு செய்து வீட்டிலிருந்தபடியே பங்கற்கலாம்

மேலும் விவரங்களுக்கு 9487521250, 9442521250, 8220422250, 9443711891, 8903045119 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது மனவளக்கலை மன்ற நிா்வாக அலுவலா் எஸ். அய்யப்பன், அறங்காவலா் எஸ். அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.