

திருச்சி யூனியன் பாங்க் ஆப் இந்தியா திருச்சி மண்டல அலுவலகத்தில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
துணை மண்டல அதிகாரி ஜெயபால் தலைமை வகித்தாா். முதன்மை மேலாளா் (விஜிலன்ஸ்) பி.ஆதிசாமி முன்னிலை வகித்தாா். முதன்மை மேலாளா்கள் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்தினா். பெண்களுக்கான வாய்ப்புகள், சவால்கள் என்னும் தலைப்பில் குடும்ப நல ஆலோசகா் தனசீலி திவ்யநாதன் சிறப்புரையாற்றினாா். முதுநிலை மேலாளா் பினு, மேலாளா் கஸ்துபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.