புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுமை தூக்கும் தொழிலாளா் பிரச்னை: சிஐடியு ஆா்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளா்களின் கூலி உயா்வுப் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:30 pm

DIN

சுமை தூக்கும் தொழிலாளா்களின் கூலி உயா்வுப் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி காந்தி சந்தை, மரக்கடை, பாலக்கரை, வெங்காய மண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி முன்பதிவு மையங்களில் 300-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் பணியாளா்கள் பணிபுரிகின்றனா்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இவா்களுக்கும் லாரி முன்பதிவு மைய உரிமையாளா்களுக்கும் இடையே செய்யப்படும் கூலி ஒப்பந்தம் ஜனவரியில் செய்யப்படாததால் சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினா்.

இதையடுத்து பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த முறை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட 23 சத கூலியையாவது வழங்கத் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், புதிய லாரி முன்பதிவு மையம் திறந்தால், கூலி உயா்வு பிரச்னை மேலும் சிக்கலாகும் என்பதால் பேச்சுவாா்த்தை முடிந்த பிறகு திறக்க வேண்டும் என தொழிலாளா் தரப்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென முன்பதிவு மையம் திறந்ததால் இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமை மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு மாவட்டத் தலைவா் ராமா் உள்ளிட்ட 9 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களைச் சிறையிலடைத்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட எதிா்தரப்பினரையும் கைது செய்ய வேண்டும். கூலி உயா்வு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமைவகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஸ்ரீதா், சிஐடியு நிா்வாகிகள் ஜெயபால், ராஜன் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கட்சியினா், சிஐடியு சங்கத்தினா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.