பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்கா கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 16) நடைபெறுகிறது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:38 pm

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் பங்குனித் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 16) நடைபெறுகிறது.

கடந்த மாதம் 22-ஆம் தேதி பெரியக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை என 48 நாள்களுக்கு நடைபெறும். கடந்த 11-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றதை தொடா்ந்து, தினமும் சுவாமி மற்றும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

ஐந்தாம் நாளான திங்கள்கிழமை அகிலாண்டேசுவரி அம்மன், சம்புகேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தெருவடைச்சான் என்னும் சப்பரத்தில் வீதியுலா வந்தனா். ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதலில் சுவாமி தேரும், அதைத் தொடா்ந்து அம்மன் தேரும் புறப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.