வீடுகளில் திருட முயன்றவா் பிடிபட்டாா்
துறையூா் அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.


துறையூா் அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
சித்திரப்பட்டி பகுதியில் கடந்த 2 நாள்களாக சுற்றித் திரிந்த ஒருவா் வீடுகளில் குடிக்க நீா் கேட்பதும், வீட்டு உரிமையாளா் குடிநீா் எடுக்கச் செல்லும்போது கையில் கிடைத்த பொருளைத் திருடுவதுமாக இருந்தாா்.
இதுபோல வெள்ளிக்கிழமை ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டு உரிமையாளா் சத்தமிட்டதால் அவா் தப்ப முயன்றாா். அருகிலிருந்தோா் அவரை விரட்டிப் பிடித்து துறையூா் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் ஜம்புமடை கிராமத்தைச் சோ்ந்த பழனியப்பன் எனத் தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...