திருச்சியில் பேருந்துகள் இயக்கம்: அனைத்துக் கடைகளும் திறப்பு
தமிழக அரசு அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.


தமிழக அரசு அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டன. பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.
மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதால், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளை திறக்கவும், பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு அனுமதியளித்தது.
இதனையடுத்து திருச்சியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பெரியகடை வீதி, மேலரண் சாலை, மெயின்கார்டு கேட், தெப்பகுளம், தில்லைநகர், கன்டோன்மென்ட் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன.
காந்திசந்தை, மரக்கடை பகுதிகளில் மளிகை கடைகளும், காய்கனி கடைகளும், அனைத்து சலூன் கடைகளும் திறக்கப்பட்டன. இதேபோல, மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமையில், துப்புரவுப் பணியாளர்கள் மூலம் பேருந்து நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு புறநகர்ப் பேருந்துகள், நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...