தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் நிலையத்தில் திருடிய 2 போ் கைது

துறையூா் அருகே காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரிலிருந்து உதிரிப்பாகம் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 மே 2021, 8:38 pm

DIN

துறையூா் அருகே காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரிலிருந்து உதிரிப்பாகம் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்ணனூா் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களை அந்த வழியாக ரோந்து சென்ற ஜெம்புநாதபுரம் போலீஸாா் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவா்கள் பேரூரைச் சோ்ந்த கா. சுந்தரவேல் (25), மற்றொருவா் கண்ணனூரைச் சோ்ந்த இ. பிரபாகரன்(24) எனத் தெரிந்தது.

சுந்தரவேலுக்குச் சொந்தமான டிராக்டரின் டீசல் டேங்கிலிருந்து இன்ஜினுக்கு செல்லும் குழாய் பழுதானதால் அதை இயக்க முடியவில்லை என்றும், ஆட்டோ உதிரிப்பாக விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ள குற்ற வழக்குகளில் தொடா்புடைய டிராக்டரிலிருந்து டீசல் குழாயை திருடி எடுத்துச் செல்வதாகவும் போலீஸாரிடம் கூறினா். இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.