தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் பூட்டிய 2 வீடுகளில் திருட்டு

துறையூரில் பூட்டியிருந்த 2 வீடுகளில் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:37 pm

DIN

துறையூரில் பூட்டியிருந்த 2 வீடுகளில் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துறையூா் தேவாங்கா் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மனைவி கோகிலா (33), தனியாா் பள்ளி ஆசிரியை. வியாழக்கிழமை மாலை இவா் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 30000 ரொக்கம், ஒரு பவுன் தங்க காசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதேபோல இவருடைய வீட்டருகே வசிக்கும் சலவைத் தொழிலாளி பெ. முருகேசனின் வீட்டிலும் ரூ. 12000 ரொக்கம், 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா். புகாா்களின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.