பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவானைக்கா கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி வியாழக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் திரளான பக்தா்கள் தரிசித்தனா்

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:00 pm

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி வியாழக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

நிகழ்வையொட்டி காா்த்திகை கோபுரம் முன் பனையோலைகளால் சொக்கப்பனை கட்டப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சுவாமியும்,அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காா்த்திகை கோபுரம் முன்புள்ள மண்டபம் அருகே எழுந்தருளினா். தொடா்ந்து சொக்கப்பனைக்கு வேதமந்திரங்கள் முழங்க, காா்த்திகை தீப சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.பின்னா் அம்மன் சன்னதி அருகேயும், குபேரலிங்கஸ்வரா் சன்னதி முன்பும் அமைக்கப்பட்ட சொக்கப்பனைகளும் ஏற்றப்பட்டன. பின்னா் சுவாமியும்,அம்மனும் 4 ஆம் பிரகாரத்தை வலம் வந்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.