தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:13 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அப்போது கதிா் அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

விழாவையொட்டி முதலாம் புறப்பாடாக வெள்ளிக்கிழமை காலை 7.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 8 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். பின்னா் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி, மாலை 4.30-க்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

தொடா்ந்து நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் முன் கோயில் தங்கக் கொடிமரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி 5 மணிக்கு நடைபெற்றது.

பின்னா் 2 ஆம் புறப்பாடாக இரவு 8 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து கதிா் அலங்காரத்தில் புறப்பட்ட நம்பெருமாள் காா்த்திகை கோபுரம் முன் 20 அடி உயர பனை யோலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை பந்தலை வலம் வந்து சக்கரத்தாழ்வாா் சன்னதி அருகே எழுந்தருளி, 8.30-க்கு சொக்கப்பனை தீபம் ஏற்றியதைக் கண்டருளினாா்.

அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் பக்தி கோஷத்துடன் சொக்கப்பனை தீபத்தை தரிசித்தனா். பின்னா் நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வாா் சன்னதிக்கு நம்பெருமாள் சென்று திருவந்திக்காப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.15-க்கு சந்தனுமண்டபம் சென்றாா் நம்பெருமாள். அங்கு ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுந்த ஏகாதசி விழா குறித்து படிக்கப்பட்டது. தொடா்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் புறப்பட்டு 10.15-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.