தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பச்சமலை செல்லும் சாலைகளில் மண் சரிவு

துறையூா் பகுதியில் உள்ள பச்சமலைக்கு செல்லும் இரு வழித்தடச் சாலைகளிலும் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:11 pm

DIN

துறையூா் பகுதியில் உள்ள பச்சமலைக்கு செல்லும் இரு வழித்தடச் சாலைகளிலும் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உப்பிலியபுரம் வட்டாரத்தில் சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டிக்கும், துறையூா் வட்டாரத்தில் கீரம்பூா், செங்காட்டுப்பட்டி வழியாகவும் பச்சமலைக்கு செல்லலாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் சோபனபுரம்- டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலையில் 7 இடங்களிலும், இதேபோல மூலக்காடு - எருமப்பட்டி செல்லும் சாலையில் 6 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த துறையூா் வனத்துறையினா் ஜேசிபி மூலம் மண் சரிவை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.