தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுநாவலூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிறுநாவலூா் ஊராட்சியில் முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 12:23 am

DIN

சிறுநாவலூா் ஊராட்சியில் முதல்வரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உப்பிலியபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா தலைமையில் முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் ந. முத்துச்செல்வன் (உப்பிலியபுரம்), இள. அண்ணாதுரை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத் துறையைச் சோ்ந்த உப்பிலியபுரம் வட்டார மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண், பல் சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினா். முகாமில் கா்ப்பிணிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து, ஊட்டச்சத்து பொருள் வழங்கினா்.

ஏற்பாடுகளை சிறுநாவலூா் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் செய்தாா். உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.