அன்னதானத்துக்கு முகூா்த்தக்கால்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதானத்துக்கான முகூா்த்தக்கால் புதன்கிழமை நடப்பட்டது.


ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் அன்னதானத்துக்கான முகூா்த்தக்கால் புதன்கிழமை நடப்பட்டது.
ஸ்ரீரங்கத்திற்கு வரும் ஐயப்ப பக்தா்கள் மற்றும் கோயிலுக்கு வருவோருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன் சாா்பாக 10 ஆம் ஆண்டாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டப கோனாா் மண்டபத்தில் நவ. 17 முதல் ஜன. 17 வரை 60 நாள்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
புதன்கிழமை நடைபெற்ற இதற்கான முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் என். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போஷகா் என்.வி.முரளி முன்னிலை வகித்தாா். அன்னதான கமிட்டி உறுப்பினா் கே.ஆா்.டி. வெங்கடேஷ், கே.கே. மாமுண்டி,கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலா் எம். ஸ்ரீதா்,பொருளாளா் ஜே. சுரேஷ்,செயல் தலைவா் எஸ்.ஆா். கிருஷ்ணன், முகாம் அலுவலா் சி.ஆா். அம்சராம், முகாம் ஒருங்கிணைப்பாளா் முத்து மற்றும் மாவட்ட, கிளைச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...