கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞா் கைது

திருச்சியில் சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:27 pm

DIN

திருச்சியில் சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை அருகேயுள்ள பட்டவெளி கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கடந்த 22 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள வெண்ணமுத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் சதீஷ்குமாா் (21) சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து வெண்ணமுத்துப்பட்டிக்குச் சென்ற தனிப்படை போலீஸாா் இருவரையும் மீட்டு திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியைக் கடத்திச் சென்ற சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸாா், அவரை முசிறி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.