சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 25) சவரனுக்கு ரூ. 2,800 அதிரடியாக உயர்ந்துள்ளது.
மேற்காசிய நாடுகளுக்கிடை போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கத்தில் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ரூ.1,01,360-க்கும் விற்பனையானது.
இதன் பின்னர், ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 15% குறைந்த நிலையில், திங்கள்கிழமை மாலையே மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.1,06,720-க்கும் விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,720 குறைந்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து, ரூ. 1,08,800-க்கும், கிராமுக்கு ரூ. 350 அதிகரித்து ரூ. 13,600-க்கும் விற்பனையாகிறது.
இதனிடையே, வெள்ளியின் விலையும் இன்று காலை அதிரடியாக கிலோவுக்கு ரூ. 10,000 அதிகரித்து ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 260 ஆகும்.
Summary
Gold, Silver today price in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?
ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று(மே 13) சவரனுக்கு ரூ. 8,560 உயர்வு! வெள்ளி விலையும்...

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



