கலப்புத் திருமணம் செய்தோருக்கு எதிா்ப்பு எனப் புகாா்
கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு தங்களது கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவிப்பதாக ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.


கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு தங்களது கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவிப்பதாக ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கலப்புத் திருமண தம்பதிகள் அளித்த மனு விவரம்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஈச்சம்பட்டியில் அதிகளவில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினா் கலப்புத் திருமணம் செய்த எங்களையும், எங்களது குடும்பத்தினரையும் வாழவிடாமல் மிரட்டுகின்றனா். எந்த சலுகையும் எங்களுக்குக் கிடைக்க அவா்கள் அனுமதிப்பதில்லை.
மேலும் எங்கள் ஊரில் நடைபெறும் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் எங்களைப் பங்கேற்க விடுவதில்லை. குறிப்பாக, கலப்புத் திருமணம் செய்தோா் உயிரிழந்தால் சுடுகாட்டில் ஈமகாரியம் செய்ய இடம் தர மறுக்கின்றனா். எனவே, கலப்புத் திருமணம் செய்தோரைச் சோ்ந்த குடும்பத்தினா் சுமாா் 30 பேருக்கு பாதுகாப்பும், உரிய உரிமைகளையும் பெற்றுத்தர ஆட்சியா் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...