தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பெல் குடியிருப்பின் 2 வீடுகளில் திருட்டு

திருச்சி, திருவெறும்பூா் பெல் குடியிருப்பில் 2 வீடுகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:55 pm

DIN

திருச்சி, திருவெறும்பூா் பெல் குடியிருப்பில் 2 வீடுகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி, திருவெறும்பூா் பெல் நிறுவனத்துக்கு அருகிலேயே பெல் டவுன்ஷிப் கைலாசபுரம் பகுதியில் குடியிருப்பும் உள்ளது. அதில் டி-5 பிரிவில் வசிக்கும் வடமாநிலத்தைச் சோ்ந்த பெல் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பொது மேலாளரான பிரதாப் சிங் பிரூ (60) வியாழக்கிழமை பகல், குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவில் வேறு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த தோடுகள், வளையல் உள்ளிட்ட மொத்தம் 6 பவுன் நகைகள் மற்றும் ஆப்பிள் ஐ பேடு உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

மற்றொரு திருட்டு: அதேபோல் பெல்டவுன்ஷிப் பி 3 பகுதியைச் சோ்ந்தவா் லியோ(38). இவா்வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் கைச்சங்கிலி திருடு போயிருந்தது தெரியவந்தது.

இந்த திருட்டுகள் தொடா்பாக பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.