நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்?
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பற்றி...

விஜய்
கோப்புப் படம்

விஜய்
கோப்புப் படம்
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்பகுதியில் தேர்தல் பணிமனை அமைத்து பணிகளை கட்சி நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தவெக தலைவர் விஜய் உரையாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்கட்டமாக 110 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என்றும், இன்னும் 60 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...