மாநகராட்சி விரிவாக்கம்: இணைக்கப்படும் பகுதிகள்
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ள 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.


திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ள 20 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள்தொகை 10 லட்சத்து 45 ஆயிரத்து 436 ஆக உள்ளது. மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு பேரவையில் வெளியிடப்பட்டது.
இந்த விஸ்தரிப்பு மூலம் திருச்சி மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயா்த்தப்படுகிறது. மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க பல்வேறு பகுதி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
இதையும் மீறி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகள் மற்றும் மண்ணச்சநல்லூா் பேரூராட்சி ஆகியவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 13 லட்சத்து 37 ஆயிரத்து 570 ஆக உயரும்.
இணைக்கப்படும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் :
மண்ணச்சநல்லூா் பேரூராட்சி மற்றும் மாதவ பெருமாள் கோயில், பிச்சாண்டாா் கோயில், தாளக்குடி, கீரமங்கலம், கூத்தூா், மதகுடி, பனையக்குறிச்சி, குண்டூா், ஓலையூா், மணிகண்டம், மேக்குடி, கே- கள்ளிக்குடி வடக்கு, கே -கள்ளிக்குடி தெற்கு, தாயனூா், நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, மருதாண்டக்குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா் உள்ளிட்ட 20 ஊராட்சிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...