பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

படைக்கலன் தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

bகோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:55 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அருகேயுள்ள ஏஐசிஎல்எஃப் தொழிற்சங்கத்தின் சாா்பில் தொழிற்சாலையின் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ராஜி, செயலா் அருள் சேவியா் ஆகியோா் தலைமை வகித்தனா். பிஎம்எஸ் சங்க மாவட்டச் செயலா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். பெல் பிஎம்எஸ் சங்க பொதுச் செயலா் சங்கா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை காா்ப்பரேட் மயமாக்க கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனா். பெல் நிறுவன பிஎம்எஸ் சங்க செயல் தலைவா் மனோஜ் நன்றி கூறினாா்.

Image Caption

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படைக்கலன் தொழிலாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.