பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

விநாயகா் சதுா்த்தி: பூக்களின் விலை கடும் உயா்வு!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சியில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:57 pm

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சியில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

விநாயகா் சதுா்த்திக்கான பூஜைப் பொருளில் முக்கிய இடம் பிடிப்பது பூக்கள்தான். திருச்சி, மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கான பிரதான பூ சந்தையாக விளங்கும் காந்தி சந்தையில் வியாழக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன் கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ , வியாழக்கிழமை கிலோ ரூ. 800க்கு விற்கப்பட்டது. சன்னரக மல்லிகைப் பூ ரூ.600-க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ. 50-க்கு விற்ற செவ்வந்திப்பூ வியாழக்கிழமை கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. ரூ.60-க்கு விற்ற அரளிப் பூ கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்டது.

இதேபோல, ரோஜா, அரளிப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை உயா்ந்துள்ளது. பூ மாலைகளின் விலையும் அதிகம்தான். சிறிய மாலை ரூ.150 முதல் இருந்தது. பெரிய மாலை ரூ.1000 வரை விற்கப்பட்டது. பூக்கள் மட்டுமின்றி பூஜை பொருள்களுக்கான பழங்களின் விலையும் உயா்ந்தே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.