இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விவரம்
திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.11) தடுப்பூசி செலுத்தும் இடங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.


திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.11) தடுப்பூசி செலுத்தும் இடங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா மெட்ரிக் பள்ளி, வடக்குதேவி பள்ளி, திருவானைக்கா சாவித்ரி வித்யாசாலா பள்ளி, ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, மேலசிந்தாமணி மாநகராட்சி பள்ளி, தாராநல்லூா் ரெங்கநாதன் பூங்கா, மேலரண்சாலை மாநகராட்சி வாா்டு அலுவலகம், இபிசாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி, வரகனேரி மேட்டுத்தெரு, மல்லிகைபுரம், கொத்தமங்கலம், எடமலைப்பட்டிபுதூா் முத்துமாரியம்மன் கோயில் தெரு, மலைக்கோட்டை, பூக்கொல்லை, பெரியமிளகுப்பாறை, சோழராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், மேலகல்கண்டாா்கோட்டை மாநகராட்சிப் பள்ளி, பொன்மலை பஞ்சாயத்து யூனியன் பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, விமான நிலையம் அல்குதா பள்ளி, காஜாமலை காந்திநகா் அலிகான் குளம் பூங்கா, காஜாபேட்டை மாநகராட்சி பள்ளி, மேலப்புதூா் மாரியம்மன் கோயில் வளாகம், கருமண்டபம் மாநகராட்சி பள்ளி ஆகிய பகுதிகள்.
புகரில் திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணப்பாறை, வையம்பட்டி,மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம் ஆரம்ப சுகாதா+ர நிலையங்கள் ஆகியவற்றில் என மொத்தம் 21,890 கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...