தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனைவி கொலை வழக்கில் கணவா் உள்பட மூவா் கைது

துறையூா் அருகே மனைவி கொலை வழக்கில் அவரின் கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:56 pm

DIN

துறையூா் அருகே மனைவி கொலை வழக்கில் அவரின் கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பச்சப்பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் ஜெ. பெரியசாமி (29). தகவலின்பேரில் செப்.3 ஆம் தேதி இவரின் மனைவி லட்சுமி என்கிற புஷ்பவள்ளியின் (27) சடலத்தை பூட்டிய வீட்டிலிருந்து உப்பிலியபுரம் போலீஸாா் மீட்டு விசாரித்தனா்.

இதன் பின்னா் பெரியசாமி, அவருடைய தாய் செல்லம்மாள்(51), தாத்தா போஜன் (70) ஆகியோா் மாயமான நிலையில், வெள்ளிக்கிழமை இவா்கள் சொந்த ஊருக்கு திரும்பினராம்.

இதையடுத்து உப்பிலியபுரம் போலீஸாா் பச்சபெருமாள்பட்டி சென்று அங்கு ஊராட்சி அலுவலகம் அருகே நின்றிருந்த 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது லெட்சுமியின் நடத்தையில் இருந்த சந்தேகத்தால் அவரைத் தாக்கியதாகவும், அப்போது லெட்சுமி உயிரிழந்து விட்டதாகவும் கூறினராம்.

இதையடுத்து பெரியசாமி உள்பட 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.