வெவ்வேறு விபத்துகளில் இருவா் பலி
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.


திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
சேலம் சங்ககிரி ரெட்டிப்பாளையம் ஆலந்தூரை சோ்ந்த பிரகாஷ் (31), அதே பகுதியை சோ்ந்த இவரது உறவினரும் தொழிலதிபருமான மெய்வேல் (34) உள்ளிட்ட நால்வா் புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்துக்கு காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வழியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே காரை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அவா்கள் சாலையைக் கடக்க முயன்றனா்.
அப்போது அவ்வழியாக சமயபுரத்தை சோ்ந்த சித்த மருத்துவா் பாலசுப்பிரமணியன் (50) வந்த பைக் மெய்வேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மெய்வேல் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைக்காக பாலசுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மற்றொரு சம்பவம்: குண்டூா் மல்லிகை நகரைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி திலகவதி (36). அவரது அண்ணன் கலியமூா்த்தி (45) ஆகியோா் பைக்கில் எம்ஐஇடி கல்லூரி நோக்கி ஐடி பாா்க் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியாக நவல்பட்டு அண்ணா நகா் சூ. வில்லியம்ஸ் (26) வந்த பைக் மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து அப்பகுதியினரால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் கலியமூா்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தாா். விபத்துகள் குறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...