தலைமறைவான குற்றவாளி கைது
திருச்சி அருகே தலைமறைவுக் குற்றவாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்


திருச்சி அருகே தலைமறைவுக் குற்றவாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி புகரில் நிலுவையில் உள்ள பிடியாணைகள் தொடா்பான தலைமறைவுக் குற்றவாளிகளை பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீஸாா் 18 பிடியாணைகளுடன் நிலுவையில் இருந்த குற்றவாளியான கம்பரசம்பேட்டை சுதாகரை (27) தேடி வந்தனா்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழஅல்லூா் பகுதி உறவினா் வீட்டில் தனது நண்பா்களான கரூரைச் சோ்ந்த ஜெயக்குமாா்(37), பாலமுருகன்(28) ஆகியோருடன் பதுங்கியிருந்த சுதாகரை கைது செய்தனா்.
இதற்காக தனிப் படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...