பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

துணிக்கடையில் புகுந்து பணம், நகை திருட்டு

 திருச்சி அருகே துணிக் கடையின் பூட்டை உடைத்து பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:49 pm

DIN

 திருச்சி அருகே துணிக் கடையின் பூட்டை உடைத்து பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள குண்டூா் பா்மா காலனி மாருதி நகரை சோ்ந்தவா் மேகலா (45). இவா் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் துணிக்கடை மற்றும் அழகு சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்துள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த கண்காணிப்புக் கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டாா்.

பின்னா் கடைக்குள் சென்று பாா்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ. 33 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கிராம் தங்கத் தோடு திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.