பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பெண் காவலா் தற்கொலை முயற்சி

 திருச்சியில் குடும்ப தகராறில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:49 pm

DIN

 திருச்சியில் குடும்ப தகராறில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா்.

தொட்டியத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி பிரேமா (35). திருச்சி மாநகர ஆயுதப்படை காவலரான இவா் தற்போது கே.கே. நகா் காவலா் குடியிருப்பில் வசிக்கிறாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த மகனை பிரேமா கண்டித்ததால் தம்பதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரேமா வீட்டின் தனியறைக்குச் சென்று தூக்கிட்டுக் கொண்டாா்.

இதையடுத்து பாண்டியன் கதவை உடைத்து பிரேமாவை மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.