பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இந்திய மாணவா் சங்கத்தினா் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:49 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்திட வேண்டும். தொடா் மாணவா் தற்கொலையை தடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் விலக்கு சட்ட மசோதாவில் உடனடியாக ஆளுநா் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைச் செயலா் கோ.அரவிந்தசாமி தலைமையில் மறியல் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் மோகன் (திருச்சி), ஹரிசுா்ஜித் ( திருவாரூா்), ஜனாா்த்தனன் (புதுக்கோட்டை), பிரபாகரன்(தஞ்சாவூா்), புதுகை சந்தோஷ் உள்ளிட்டோா் பேசினா். திருச்சி மாவட்டத் தலைவா் துளசிதாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.