பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உள்ளாட்சி இடைத்தோ்தல்:72 வேட்புமனுக்கள் ஏற்பு

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சி பதவி இடைத்தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது வியாழக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடியாகின.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:52 pm

DIN

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சி பதவி இடைத்தோ்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது வியாழக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 மனுக்கள் தள்ளுபடியாகின.

தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலோடு, ஊரகப் பகுதியில் காலியாகவுள்ள உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தோ்தலும் நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 24 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு, மருங்காபுரி ஒன்றியத்தில் 10ஆம் வாா்டு, துறையூா் ஒன்றியத்தில் 13ஆம் வாா்டு, வையம்பட்டி ஒன்றியத்தில் 6ஆம் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது வையம்பட்டி 6ஆம் வாா்டுக்கு பெற்ற 8 மனுக்களில் ஒரு மனுவும், துறையூா் 13ஆம் வாா்டுக்கு பெற்ற 10 மனுக்களில் ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஊராட்சித் தலைவா் பதவிக்கு லால்குடி ஒன்றியத்தில் சிறுமருதூா் ஊராட்சி, புள்ளம்பாடி ஒன்றியத்தில் கீழரசூா் ஊராட்சி ஆகியவற்றுக்கு தலா 4 மனுக்கள் பெற்று அவை ஏற்கப்பட்டுள்ளன.

ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு பூசம்பட்டி ஊராட்சி 7ஆம் வாா்டு, கொணைகுடி ஊராட்சி 5ஆம் வாா்டு, கொணலை ஊராட்சி 8ஆம் வாா்டு, கே. பெரியபட்டி ஊராட்சி 2ஆம் வாா்டு, சீகம்பட்டி ஊராட்சி 1ஆம் வாா்டு, நாகமங்கலம் ஊராட்சி 8ஆம் வாா்டு, ஓமந்தூா் ஊராட்சி 1ஆம் வாா்டு, கொடும்பபட்டி ஊராட்சி 4ஆம் வாா்டு, தேனூா் ஊராட்சி 8ஆம் வாா்டு, தெத்தூா் ஊராட்சி 1ஆம் வாா்டு.

ஜெயங்கொண்டான் ஊராட்சி 2ஆம் வாா்டு, பைத்தம்பாறை ஊராட்சி 4ஆம் வாா்டு, தும்பலம் ஊராட்சி 7ஆம் வாா்டு, கீழக்குறிச்சி ஊராட்சி 10ஆம் வாா்டு, பழங்கனாங்குடி ஊராட்சி 9ஆம் வாா்டு, ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி 5ஆம் வாா்டு, எம். களத்தூா் ஊராட்சி 6ஆம் வாா்டு, செனப்பநல்லூா் ஊராட்சி 2ஆம் வாா்டு, ஆங்கியம் ஊராட்சி 6ஆம் வாா்டு ஆகிய உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 39 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வேட்பு மனு வாபஸ் பெற 25ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.9 தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்.20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்.

போட்டியின்றித் தோ்வாகும் 5 வாா்டு உறுப்பினா்கள்

நாகமங்கலம் 8ஆம் வாா்டு, தேனூா் 8 ஆம் வாா்டு, தும்பலம் 7ஆம் வாா்டு, எம். களத்தூா் 6ஆம் வாா்டு, ஜெயங்கொண்டான் 5ஆம் வாா்டு ஆகியவற்றின் உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒரு வேட்புமனுக்கள் மட்டுமே பெறப்பட்டு அவையும் வியாழக்கிழமை ஏற்கப்பட்டுள்ளதால், இந்த 5 இடங்களுக்கும் வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.