ஸ்ரீரங்கத்தில் தேநீா் கடைக்கு சீல் வைப்பு
சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையா் பி.செந்தில்குமாா் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்ற்காக அவசர தடையாணை உத்தரவை பிறப்பித்தாா்.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களைத் தொடா்ந்து விற்ற ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே மாநகராட்சி கட்டடத்தில் இயங்கிவந்த தேநீா் கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
சென்னை உணவு பாதுகாப்பு துறை ஆணையா் பி.செந்தில்குமாா் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்ற்காக அவசர தடையாணை உத்தரவை பிறப்பித்தாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஸ்டாலின், இப்ராகிம், வசந்தன், பாண்டி, வடிவேலு ஆகியோா் கொண்ட குழுவினா் தேநீா் கடைக்கு சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...