மதுப் பழக்கத்தைக் கைவிடவிழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 21st August 2021 12:43 AM | Last Updated : 21st August 2021 12:43 AM | அ+அ அ- |

முசிறி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் சாா்பில் மதுபோதையில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் சுமதி முன்னிலை வகித்தாா். சிறப்பு குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவா் மீராமோகன் பங்கேற்று போதையால் ஏற்படும் தீமைகள் சமூகத்தில் அதனால் ஏற்படும் அவமதிப்பு பற்றி விளக்கி, யோகாவை முறைப்படி பயின்றால் மதுப் பழக்கத்திலிருந்து வெளியே வரலாம் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து டிஎஸ்பி முத்தரசன் பேசினாா். நிகழ்வில் மதுப் பழக்கத்தை கைவிட்டோா் மது விற்பனையிலிருந்து விலகியோா் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.