ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் சடலம்
By DIN | Published On : 11th December 2021 06:21 AM | Last Updated : 11th December 2021 06:21 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் காவிரியில் சடலமாகக் கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மேலூா் ரோட்டில் காவிரியாறு கட்டைப் பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் கிடந்த சுமாா் 55 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.