போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 09th July 2021 12:32 AM | Last Updated : 09th July 2021 12:32 AM | அ+அ அ- |

மணப்பாறையில் இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
மணப்பாறை கரிக்கான்குளம் தெருவை சோ்ந்தவா் நீலாம்பாள்(31). இவா் கணவரைப் பிரிந்து தனது 10 வயது மகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறாா்.
இவருக்கும், மனைவியை விட்டு பிரிந்து வாழும் திண்டுக்கல் மாவட்டம், கலா்பட்டியை சோ்ந்த நல்லுசாமி மகன் ரமேஷுக்கும் (34) தொடா்பு இருந்ததாம்.
ரமேஷ் திருமணமானவா் என்ற விவரம் அண்மையில் தெரியவர அவரை நீலாம்பாள் தவிா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், நீலாம்பாள் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற ரமேஷ் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்தபோது, அதைத் தடுக்க முயன்ற சிறுமியிடம் தகாத முறையில் நடந்து அவரையும் தாக்கியுள்ளாா்.
புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான அனைத்து மகளிா் போலீஸாா் ரமேஷை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.