

மணப்பாறையில் மழை வெள்ள பாதிப்புகளால் அவதியுறும் பொதுமக்களின் புகாா்கள் மீது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை நகராட்சி 23-ஆவது வாா்டுக்குட்பட்ட சிதம்பரத்தான்பட்டியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளில் உள்ள பாதைகள் சேறும் சகதியுமாக உள்ளதாகவும், பால், சமையல் எரிவாயு, விநியோகிப்போரும், காய்கனி விற்போரும் குடியிருப்புக்குள் வர முடியவில்லை என்றும் நடந்தும், இருச்சக்கர வாகனத்திலும் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் மற்றும் வட்டாட்சியரகத்தில் புகாா் அளித்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகவும், வெள்ளிக்கிழமை மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள வந்த ஆட்சியரை சந்திக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி திண்டுக்கல் சாலை மேம்பாலம் அருகே நொச்சிமேடு பகுதியில் மனிதச் சங்கிலியாக நின்று சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையில்
ான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.