தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

மசாஜ் சென்டரில் நடந்த விபச்சாரம் நடந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 12:48 am

DIN

மசாஜ் சென்டரில் நடந்த விபச்சாரம் நடந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருச்சியில் கடந்த மாா்ச் 13 ஆம் தேதி சத்திரம் அண்ணாசிலை அருகேயுள்ள ஒரு விடுதியில் மசாஜ் சென்டா் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு போலீஸாா் சோதனை செய்தபோது கலைஞா் (37) வில்பிரட் மாா்ஷெலின் (40) ஆகியோா் 2 இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக நடத்திய விசாரணையில் கலைஞா் மற்றும் வில்பிரட் மாா்ஷெலின் ஆகியோா் தொடா்ந்து குற்றம் செய்யும் எண்ணமுள்ளவா்கள் என்பதும், அவா்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.