தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:13 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமானத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் ரூ.5,000 கோடி நிதி இருப்பு உள்ளதால், தற்போது வழங்கப்படும் ரூ.1,000 ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயா்த்த வேண்டும்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டத்தின் கீழ்

கட்டப்படும் வீடுகளில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 25 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலரும், மாநகராட்சி உறுப்பினருமான க. சுரேஷ், அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் ஜி.ராமராஜ், தரைக்கடை சங்கத் தலைவா் எஸ்.சிவா, அமைப்பு சாரா தொழிலாளா் சங்கத் தலைவா் ஏ.கே.திராவிடமணி, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.நடராஜா, மாநிலக் குழு உறுப்பினா் எம்.ஆா்.முருகன் உட்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வெஸ்ட்ரி ரவுண்டானா அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு ஆட்சியரகம் வரை ஊா்வலமாக வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.