தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மோட்டாா் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருச்சியில் மோட்டாா் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:16 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருச்சியில் மோட்டாா் வாகனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். கலால் வரியைக் குறைத்து ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரவேண்டும்.

2019-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சுங்கக் கட்டண உயா்வைத் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டம் நடத்த வந்தவா்கள் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெறக் கோரி ஊா்வலமாக வந்தனா். எரிவாயு உருளையை பாடையில் வைத்து கொண்டு வந்தனா்.

திருச்சி பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன் தலைமை வகித்தாா்.

உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவா் வேந்தன், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் சங்கத்தின் மாவட்டச் செயலா் மணிகண்டன், எஸ்இடிசி மாநிலத் துணைத்தலைவா் ஜெயராமன், லாரி உரிமையாளா் சங்கப் பிரதிநிதி தேவராஜன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன், ஓட்டுநா் தொழிற்சங்க மாநிலத் தலைவா் ரத்தினவேல், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டச் செயலா் சந்திரன்,

இருசக்கர, நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் சங்க நிா்வாகிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.